Wednesday, January 14, 2015

On Wednesday, January 14, 2015 by Unknown in ,    
திருப்பூர், ஜன. 13: திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுக் கடைகள், மதுக்கூடங்களுக்கு ஜனவரி 16-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவள்ளுவர் தினத்தையொட்டி, ஜனவரி 16-ஆம் தேதி தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுக் கடைகள், மதுக் கூடங்கள், எஃப்.எல் 2, எஃப்.எல் 3 உரிமம் பெற்ற பார்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: