Friday, January 23, 2015

On Friday, January 23, 2015 by farook press in ,    
அமெரிக்க அதிபர் ஒபாமா வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் கண்டன இயக்கம் நடத்தும்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் சிலை முன்பாக ஜனவரி 24ம் தேதி சனியன்று மாலை 5 மணிக்கு இரு கட்சிகள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுடன், இந்திய இறையாண்மையைப் பாதுகாக்க விரும்பும், ஜனநாயக எண்ணம் கொண்ட அனைத்துப் பகுதியினரும் பெருந்திரளாகப் பங்கேற்கும்படி மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 comments: