Monday, January 19, 2015

On Monday, January 19, 2015 by Unknown in ,    
முத்தூரில் செல்லிடைபேசிக் கடையின் சுவற்றில் துளைபோட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்து ரூ.65,000 ரொக்கத்தை திருடிச்சென்றனர்.
கடந்த 25 ஆண்டுகளில் சுவற்றைத் துளையிட்டு திருடிய சம்பவம், காங்கயம் வட்டாரத்தில் இது தான் முதல் முறையென போலீஸார் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் அருகே ஊஞ்சக்காட்டுவலசைச் சேர்ந்தவர் கே.சசிக்குமார் (31). இவர், தற்போது திருப்பூர் மாவட்டம் சின்னமுத்தூர் கல்லன் தோட்டத்தில் வசித்து வருகிறார். அவர், முத்தூர் பேருந்து நிலையம் அருகில் எம்.வி.பி. வணிக வளாகத்தில் செல்லிடைபேசிக் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல சனிக்கிழமை இரவு அவர் கடையைப் பூட்டிச்சென்றார்.
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை காலை சசிக்குமார் கடையைத் திறந்தபோது, பொருள்கள் சிதறிக் கிடப்பதையும், கடையின் பின்புறச் சுவற்றில் பெரியளவில் ஓட்டை போடப்பட்டிருந்ததைப் பார்த்தும் அதிர்ச்சியடைந்தார். மேஜையில் இருந்த ரூ.65,000 ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. செல்லிடைபேசிகள் திருடுபோகவில்லை.
கடையையொட்டியுள்ள, செல்லிடைபேசி பழுது சரிசெய்யும் அறையின் மேற்கூரை வழியாக மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து, கடப்பாறையால் சுவற்றில் துளைபோட்டு தப்பிச்சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. காங்கயம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுருளிராஜன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

0 comments: