Monday, January 19, 2015

On Monday, January 19, 2015 by Unknown in ,    



வேகமாகப் பரவிவரும் காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் சாக்கடைக் கால்வாய்களைத் தூர்வாரி, குப்பை, புதர்களை உடனடியாக அகற்றுமாறு ஆட்சியர் கு.கோவிந்தராஜ் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் வேகமாகப் பரவிவரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான அவசர ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில், பொதுமக்கள் மத்தியில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அறுவுறுத்தப்பட்டது.
டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சாக்கடைக் கால்வாய்களைத் தூர்வாரவும், குப்பையையும், புதர்களையும் உடனடியாக அப்புறபடுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உள்ளாட்சித் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதில், மாநகராட்சி ஆணையர் எம்.அசோகன், ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்(பொது) லதா, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் என்.ரகுபதி, மாநகர் நல அலுவலர் செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments: