Monday, January 19, 2015

On Monday, January 19, 2015 by Unknown in ,    
Displaying DSC_0896.JPGDisplaying DSC_0953.JPGDisplaying DSC_0776.JPG

மதுரையில் படிக்கட்டுகள் இளைஞர்கள் அமைப்பின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் இந்திரா சௌந்திரராஜன் அவர்கள், சாட்சியம் அமைப்பின் தலைவர் கதிர் வின்சன்ட் ராஜ், பார்வையற்றோர் இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் ரமேஷ் சச்சின், அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பித்துத் தந்தார்கள். மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில், அமைப்பின் இரண்டு ஆண்டு சாதனைகள், நெகிழ்ச்சித் தருணங்கள் நிரம்பிய காட்சிப்படங்கள் திரையிடப்பட்டன. மனிதத்தை போற்றும் யதார்த்த வாழ்க்கையின் மக்களைப் போற்றவும், கௌரவப்படுத்தும் விதமாக ‘மனித சேவகர், சேவகி 2௦14’ விருதுகள் வழங்கப்பட்டது. இதில் மதுரையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அறியப்படாத 12 ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

விவரங்கள் பின்வருமாறு
1.    திருமதி. மாரியம்மாள் மதுரையின் ஒரே பெண் வெட்டியான்,
முதியோர் இல்லங்களிலும்,சாலையோரங்களிலும் இயற்கை எய்தும் ஆதரவற்ற முதியவர்களை முறைப்படி அடக்கம் செய்யும் ஒரு சமூக சேவகி

2.    அமுதன்- குருதி கொடையாளர்,சமூக சேவகர் 
இரத்ததானம் கொடுக்கவும்,இரத்த தானத்திற்கு தன்னார்வலர்கள் சேர்க்கவும் போராடும் முதியவர்.
3.   
சூர்யா விசேஷ வீடுகளில் மீதமாகும் உணவுகளை காப்பகங்களுக்கு கொண்டு போய் சேர்ப்பவர்

4.    சபரி ஷங்கர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகவே தன் வாழ்வை அர்பணித்தவர்.அவர்களின் உணவுக்கும்,கல்விக்கும் உதவுபவர்
5.   
அஜ்மல்-பிரசன்னா-வினோத் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகளும்,ஆலோசனைகளும் செய்பவர்கள்
6.   
பாரதி-சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு தன் இல்லத்தில் அடைக்கலம் தந்தும்,பல முதியோர்களுக்கு ஆதரவளித்தும் வருபவர்
7.   
ராமு சேர்வை பூர்ணத்தாம்மாள்: பல வருடங்களாக 5 ரூபாய் சாப்பாடு,1௦ ரூபாய் சாப்பாடு என ஏழைகளுக்கும்,அடித்தட்டு மக்களுக்கும் உணவு சேவை வழங்கி வரும் தம்பதியினர்

8.    ஹரி- வெட்டியான் மற்றும் சுற்றுசூழல் காப்பாளர்
தத்தனேரி இடுகாட்டை பசுமையாக்கவும்,பல குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்யவும் போராடும் ஒரு சமூக சேவகர்
9.   
கனி- விசேஷ நாட்களில் குழந்தைகள் மற்றும் முதியவர் காப்பகங்களுக்கு குறைவான விலையில் ,ருசியான உணவுகள் செய்து தருபவர்

வீர குமார்- சாலையோர ஆதரவற்றோர்களுக்கு வாடிக்கையாக முடி வெட்டி விடும் முடித் திருத்துபவர்

11.  நேதாஜி ட்ரஸ்ட் ஹரி’- 108 ஆம்புலன்ஸ் சேவையை போல்,விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவி செய்து வருபவர்
12. 
அமுத ஷாந்தி- மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து,அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் கொடுக்கும் ஒரு மாற்றுத் திறனாளி
13.  
சேகர்- வாரம்தோறும் ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு இலவசமாக டீ,காபி,பால் தானம் செய்யும் ஒரு சமூக சேவகர்  
தன்னம்பிக்கை மனிதர்களுக்கான விருதுகள் கண் பார்வையற்ற இளநீர் வியாபாரி ராஜா அவர்கள்,தன் குழந்தையின் உடல் உறுப்பை தானமாக தந்த வனிதா ஆகியவர்களுக்கு வழங்கப்பட்டது. 
மூன்றாம் ஆண்டு சேவையின் துவக்கமாக மதுரையிலும், மதுரையை சுற்றியுள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அரிசி,மளிகை சாமான்கள், உடை, கல்வி உதவி, பாத்திரங்கள் போன்றவைகள் கொடுக்கப்பட்டன. இதில் மதுரை, சென்னை, கோவையில் இருந்து வந்த படிக்கட்டுகள்  இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0 comments: