Monday, January 12, 2015

On Monday, January 12, 2015 by Unknown in ,    
திருப்பூரில் பனியன் துணிகளை வாங்கிக் கொண்டு நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் அளித்த பணத்தில் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் நோவா (34). இவர் சனிக்கிழமை மாலை திருப்பூர் காதர்பேட்டையிலுள்ள ஒரு கடையில் பனியன் துணிகளை வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 12 இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த வியாபாரி திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸார் நைஜீரியரை வரவழைத்து விசாரித்தனர். இதில், சனிக்கிழமை மதியம் ஊத்துக்குளி சாலையிலுள்ள தேசிய வங்கி ஏடிஎம்-ல் ரூ.50 ஆயிரம் பணம் எடுத்ததாகவும், அந்தப் பணத்தில் பனியன் துணி வாங்கியதாகவும் தெரிவித்தார்.

0 comments: