Monday, January 12, 2015

On Monday, January 12, 2015 by Unknown in ,    
பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் பல்லடம் எம்.சி.திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் வி.காளியப்பன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சா.புருசோத்தமன், நகரச் செயலாளர் கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: விசைத்தறிகளுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள இலவச கல்வி முறையை சரியான முறையில் அமல்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
முன்னதாக, மாவட்டத் தலைவர் மாதப்பூர் சாமிநாதன் வரவேற்றார். இதில் மாநில தேர்தல் பணிக் குழுத் தலைவர் சதாசிவம், மாநில துணை பொதுச் செயலாளர் அ.ரவிச்சந்திரன், மாநில நிர்வாகிகள் கி.மாதவன், மன்சூர், மாவட்ட நிர்வாகிகள் பொன்நடராசு கவுண்டர், கரிகாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.

0 comments: