Tuesday, January 13, 2015

திருவள்ளுவர், பாரதியாரின் சிறப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக உத்தரகாண்ட் மாநில பாரதீய ஜனதா எம்.பி. தருண்விஜய், திருவள்ளுவர் திருப்பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பிரசார பயணத்தை தொடங்கி உள்ளார்.
நேற்று மாலை மதுரை வந்த அவருக்கு பாரதியார் பணிபுரிந்த சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. இன்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:–
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தன் கருத்துக்கள் மூலம் கலாச்சாரத்தை உருவாக்கியவர் திருவள்ளுவர். அனைத்து மக்களும் சமமாக இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்று கூறியவர்.
தமிழ்நாட்டில் தான் கடவுளே குற்றம் செய்தாலும் அது குற்றமே என வாதாடிய தமிழ் புலவர் நக்கீரர் போன்றவர்கள் உருவாகி உள்ளனர். உலக அமைதிக்காக எப்படி ஐ.நா.சபை உருவாக்கப்பட்டதோ, அதே ரீதியில்தான் மனிதருக்குள் அமைதி, நல்வழிமுறைகளை வகுத்து மனிதகுலம் அமைதியாக வாழ என்ன வழி என்பதையும் திருவள்ளுவர் நமக்கு தந்துள்ளார்.
மகாத்மாகாந்தி கூட திருக்குறளை பற்றி அறிந்து தமிழ் கற்க ஆசைப்படுகிறேன் என்று கூறி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நிருபர்கள், நீங்கள் திடீரென தமிழ் மீது ஆர்வம் காட்டுவது ஏன்? என்று கேட்டனர். இதற்கு தருண்விஜய் எம்.பி. அளித்த பதில் வருமாறு:–
என் மாநிலத்தில் உள்ள இலக்கியம்தான் மேன்மையானது, பெருமைவாய்ந்தது என்றெல்லாம் ஆணவத்தோடு இருந்தேன். இப்போது தான் திருக்குறளின் மேன்மை எனக்கு தெரியவந்தது.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதியை எதிர்த்துள்ளார். எல்லா மனிதர்களும் பிறப்பு முதல் இறப்பு வரை சமம் என்று கூறியதோடு, அப்படிப்பட்ட சமுதாயத்தையும் உருவாக்கி உள்ளார். தமிழ் கலாச்சாரத்தின் வளம், தந்திரம், மேன்மை என தெரியவரும்போது தமிழ் என்னை ஈர்த்தது தவறில்லை.
தமிழகத்தில் தற்போது ஆங்கில மோகம் அதிகரித்துள்ளது. தமிழ் குழந்தைகள் செல்போன் நம்பரைக்கூட தமிழில் கூறமுடியவில்லை. ஆங்கிலத்தில்தான் சொல்கிறார்கள். தமிழை சரளமாக பேசமுடியாத நிலை இப்போது உள்ளது. இந்த சூழல் மாறவேண்டும். தமிழ் மொழியின் மேன்மையை நான் எப்படி உணர்ந்துள்ளேனோ, அது போல இங்குள்ள ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
திருக்குறளை தமிழில் கற்றுக்கொடுக்க எனது வீட்டில் ஒரு தமிழ்மொழி கற்பிக்கும் மையம் அமைத்திருக்கிறேன். இதற்கு தமிழ் ஆர்வலர்கள் உதவி செய்யலாம். திருவள்ளுவர்தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அப்போதே உருவாக்கி இருக்கிறார். சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும். இதற்கு ஜனாதிபதியை சந்தித்து பேசி இருக்கிறேன். எனது எண்ணத்தையும் சொல்லி இருக்கிறேன்.
ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாடு கிராமப்பகுதி விவசாயிகளின் விளையாட்டாகும். இந்த விளையாட்டின்போது கிராம விவசாயிகள் யாரும் மாடுகளை கொல்வதில்லை. இது கலாச்சார விளையாட்டு. பொழுதுபோக்கிற்காக இந்த விளையாட்டை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த விளையாட்டுக்கு நான் ஒத்துழைப்பு தெரிவிப்பேன். தமிழ் மனத்தில் ஒரு பகுதி ஜல்லிக்கட்டு ஆகும். இதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment