Friday, January 02, 2015

On Friday, January 02, 2015 by farook press in ,    
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்தவர் மாதேஷ்வரன்(வயது35). இவர் பொங்கலூர் அருகே உள்ள குருநாதம்பாளையத்தில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் தோட்டத்தில் சக தொழிலாளர்களுடன் கிணறு தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கிணற்றினுள் இருந்து மேலே மண் எடுத்துச்சென்ற கூடையில் இருந்து கல் எதிர்பாராதவிதமாக மாதேஷ்வரன் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த மாதேஷ்வரன் கிணற்றுக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த மாதேஷ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

0 comments: