Friday, January 02, 2015

On Friday, January 02, 2015 by farook press in ,    
திருப்பூர்–ஊத்துக்குளி ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளதால், ஊத்துக்குளி ரோட்டில் நாளை(சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர்–ஊத்துக்குளி ரோட்டில் கோர்ட்டு வீதி சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் மூலமாக ரெயில்வே சுரங்க பாலம் மற்றும் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. எனவே இந்த பாலங்கள் கட்டுமான பணி முடிவடையும் வரை ஊத்துக்குளி ரோட்டில் மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் டவுன்ஹால், குமரன் சாலை வழியாக சென்று ஸ்ரீசக்தி தியேட்டரை அடைந்து யூனியன் மில் ரோடு வழியாக ஊத்துக்குளி ரோட்டுக்கு செல்ல வேண்டும். இதுபோல் ஊத்துக்குளி இருந்து திருப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் 2–வது ரெயில்வே கேட்டில் இருந்து மின் மயானம் சாலை வழியாக எம்.ஜி.ஆர். சிலையை அடைந்து பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றம் நாளை(சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து மாற்றத்திற்கு, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments: