Thursday, January 01, 2015

On Thursday, January 01, 2015 by Unknown in ,    
உடுமலையில் விலையில்லா வேட்டி, சேலைகள் விநியோகத்தை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் புதன்கிழமை துவக்கி வைத்தார்.
உடுமலை வட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 250 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 93 ஆயிரத்து 274 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி-சேலைகள் வழங்கப்பட உள்ளன. இதையொட்டி நகராட்சி வளாகத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் வேட்டி, சேலைகளை விநியோகிப்பதற்கான துவக்க விழா நடைபெற்றது.
இதில், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகளை வழங்கி, விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
இதில், மடத்துக்குளம் எம்எல்ஏ சி.சண்முகவேலு, உடுமலை கோட்டாட்சியர் அ. சாதனைக்குறள், வட்டாட்சியர் எஸ்.சைபுதீன், நகராட்சித் தலைவர் கேஜிஎஸ்.ஷோபனா, துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், அதிமுக நகரச் செயலாளர் கேஜி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மடத்துக்குளம் வட்டம்: மடத்துக்குளம் வட்டத்தில் சுமார் 33 ஆயிரத்து 250 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 32 ஆயிரத்து 263 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி,சேலைகள் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில் மடத்துக்குளத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை துவக்கி வைக்கப்பட்டது. இதில், எம்எல்ஏ சி.சண்முகவேலு(மடத்துக்குளம்), மடத்துக்குளம் வட்டாட்சியர் சண்முகவடிவேலு, ஒன்றியக் குழுத் தலைவர் மெட்ராத்தி நா.அண்ணாத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments: