Friday, February 27, 2015

On Friday, February 27, 2015 by farook press in ,    
முற்போக்கு தமிழ் மரபை முன்னெடுப்போம், மனுதர்ம தந்திரத்தை முறியடிப்போம்!" என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநில மாநாடு திருப்பூரில் மார்ச் 19ம் தேதி முதல் 22ம் தேதி முடிய நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக மார்ச் 1ம் தேதி ஞாயிறன்று மாநில மாநாட்டு வரவேற்புக்குழு அலுவலகத் திறப்பு விழா நடைபெறுகிறது.
திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந்த விழா நடைபெறும் என்று வரவேற்புக்குழுத் தலைவர் அரிமா எம்.ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் கருப்பராயன் கோயில் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டு வரவேற்புக்குழு நிர்வாகிகள், பணிக்குழுத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் வியாழக்கிழமை தலைவர் எம்.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இதில் வரவேற்புக்குழு கௌரவத் தலைவர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கே.வேலாயுதம், வரவேற்புக்குழுச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் மற்றும் லிங்க்ஸ் சௌகத் அலி, ஆர்.ஏ. ஏஜென்சிஸ் கே.ஜெயபால், வி.டி.சுப்பிரமணியம், கீதாஞ்சலி கோவிந்தப்பன், பிரிண்டிங் குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், திருப்பூர் மாநகரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டை தமிழக பண்பாட்டு தளத்தில் முற்போக்கு திசைவழியில் திருப்புமுனை ஏற்படுத்தும் மாநாடாக வெற்றிகரமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பல்வேறு குழுக்களின் பணிகள் பற்றி விவாதித்து, வரக்கூடிய நாட்களில் பணிகளை முனைப்புடன் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டது.
இதில் கௌரவத் தலைவர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கே.வேலாயுதம், செயலாளர் ஆர்.ஈஸ்வரன் உள்பட பலர் உரையாற்றினர்.
இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக மார்ச் 1ம் தேதி முதல் திருப்பூர் டைமண்ட் தியேட்டர் எதிரில், கே.ஆர்.சி சிட்டி சென்டரில் வரவேற்புக்குழு அலுவலகம் முழு நேரமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலகத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும். இதில் தமுஎகச அமைப்பினர் மட்டுமின்றி கலை, இலக்கிய, பண்பாட்டு தளத்தில் செயல்படும் அனைத்து படைப்பாளிகளும் பங்கேற்கும்படி வரவேற்புக்குழுத் தலைவர் எம்.ஜீவானந்தம் கேட்டுக் கொண்டார். 
வரவேற்புக்குழுக் கூட்டத்தின் நிறைவாக துணைத் தலைவர் பி.ஆர்.கணேசன் நன்றி கூறினார்.



0 comments: