Thursday, February 26, 2015

On Thursday, February 26, 2015 by Unknown in ,    
அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 31 குழந்தைகளுக்கு நாளை காலை தங்கமோதிரம்: நத்தம் விஸ்வநாதன் வழங்குகிறார்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று பால்குட ஊர்வலம், சர்வ சமய பிரார்த்தனை, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாலை கிருஷ்ணன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.
ஜெயலலிதா பிறந்த நாளில் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
அதன்படி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று 19 ஆண், 12 பெண் குழந்தைகள் என மொத்தம் 31 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு நாளை (வியாழக்கிழமை) காலை 6.30 மணிக்கு நடக்கிறது. மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடக்கும் இந்த விழாவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்குகிறார். பகுதி செயலாளர் ராஜலிங்கம் முன்னிலை வகிக்கிறார்.
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கிறார். விழாவில் மேயர் ராஜன்செல்லப்பா, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், சுந்தர்ராஜன், துணை மேயர் திரவியம், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா மற்றும் பகுதி, தொகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.
இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் முதல்வர் அம்மா பிறந்தநாளில் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 6.30 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் தங்கமோதிரம் வழங்கி பேசுகிறார். இந்த விழாவில் மேயர், துணை மேயர், எம்.எல்.ஏ.க்கள், பங்கேற்று சிறப்பிக்கிறார்கள்.
இந்த விழாவில் மாவட்ட நிர்வாகிகள், தொகுதி, பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், திரளாக பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

0 comments: