Tuesday, February 17, 2015

On Tuesday, February 17, 2015 by farook press in ,    
உடுமலை ராஜலட்சுமி கெங்குசாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி (ஆர்.ஜி.எம்.பள்ளி) நிர்வாகத்தின் ஆரண்யா அறக்கட்டளை சார்பில், இயற்கை சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கான 5 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் தூர மினி மராத்தான் ஓட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் 5 கிலோ மீட்டர் மினி மராத்தானில் கலந்துகொள்கிறவர்கள் உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இருந்து 2½ கிலோ மீட்டர் தூரம் உள்ள தாராபுரம் ரோடு சங்கர் நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபம் வரை சென்று திரும்பி வர வேண்டும் என்றும், 10 கிலோ மீட்டர் மினி மராத்தானில் கலந்துகொள்கிறவர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் தாராபுரம் ரோடு இந்திரா நகர் வரை சென்று திரும்பி வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மினி மராத்தான் ஓட்டத்தை மாவட்ட வன அலுவலர் தன்ராஜ், உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஏ.கனகேஸ்வரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். மினி மராத்தான் ஓட்டத்தில் 2,200 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மினி மராத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. விழாவிற்கு ஆரண்யா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.நந்தினி ரவீந்திரன் தலைமை தாங்கி வரவேற்றுப் பேசினார். அறங்காவலர் ஜி.ரவீந்திரன், நகராட்சி தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
10 கிலோ மீட்டர் தூர மினி மராத்தான் ஓட்டத்தில் ஆண்களுக்கான பிரிவில் முதல் இடம் பெற்ற கோவை பி.எஸ்.ஜி.கல்லூரி மாணவர் பி.கார்த்திக்கு ரூ.7ஆயிரமும், 2–வது இடம் பெற்ற கோவை கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர் என்.செந்தில்குமாருக்கு ரூ.5 ஆயிரமும், 3–வது இடம் பெற்ற சேத்துமடையை சேர்ந்த டி.ராஜனுக்கு ரூ.3 ஆயிரமும், 4–வது இடம் பெற்ற பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி மாணவர் கே.சிவக்குமாருக்கு ரூ.1,000 மும் பரிசாக வழங்கப்பட்டது.
பெண்களுக்கான பிரிவில் முதலிடம் பெற்ற உடுமலை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி பள்ளி (எஸ்.கே.பி.பள்ளி) மாணவி வி.மோனிகாவிற்கு ரூ.4ஆயிரமும், 2–வது இடம் பெற்ற கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவி எஸ்.காளீஸ்வரிக்கு ரூ.3ஆயிரமும், 3–வது இடம் பெற்ற முத்துலட்சுமிக்கு ரூ.2 ஆயிரமும், 4–வது இடம் பெற்ற உடுமலை எஸ்.கே.பி.பள்ளி மாணவி ராஜஜெயவர்ஷினிக்கு ரூ.1000, 5–வது இடம் பெற்ற பள்ளபாளையம் ஸ்ரீஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி எஸ்.கோகிலாவிற்கு ரூ.500–ம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
5 கிலோ மீட்டர் மினிமராத்தான் ஓட்டத்தில் ஆண்களுக்கான பிரிவில் முதலிடம் பெற்ற ரவிக்குமாருக்கு ரூ.5ஆயிரமும், 2–வது இடம் பெற்ற எம்.அருண்பிரபுக்கு ரூ.4 ஆயிரமும், 3–வது இடம் பெற்ற எஸ்.கோகுலுக்கு ரூ.3 ஆயிரமும், 4–வது இடம் பெற்ற அமராவதி நகர் சைனிக் பள்ளி மாணவர் பங்கஜ குமாருக்கு ரூ.2 ஆயிரமும், 5–வது இடம் பெற்ற வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி மாணவர் வி.சந்தோஷ்க்கு ரூ.1000 வழங்கப்பட்டது.
பெண்களுக்கான பிரிவில் முதலிடம் பெற்ற குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி.மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யாவிற்கு ரூ.3 ஆயிரமும், 2–வது இடம் பெற்ற அதே பள்ளி மாணவி கே.பிரணிதாவிற்கு ரூ.2 ஆயிரமும், 3–வது இடம் பெற்ற கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவி எம்.கலைமணிக்கு ரூ.1000மும், 4–வது இடம் பெற்ற ஆர்.வி.ஜி.பள்ளி மாணவி ரஞ்சிதாவிற்கு ரூ.750–ம், 5–வது இடம் பெற்ற பெதப்பம்பட்டி ஆர்.ஜி.எம்.பள்ளி மாணவி மதுவர்ஷினிக்கு ரூ.500–ம் வழங்கப்பட்டது. 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் தூர போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகளுடன் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.
பரிசு கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசுகளை திரைப்பட நடிகை மற்றும் பாடகியான ஆண்ட்ரியா வழங்கினார். முடிவில் அறக்கட்டளை செயலாளர் ஏ.கார்த்திகேயன் நன்றி கூறினார். விழாவில் உடுமலை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், உடுமலை மக்கள் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் கே.பாலசுந்தரம், டாக்டர் ஆர்.சிவசண்முகம், ஆரண்யா அறக்கட்டளை ஆலோசகர்கள் பத்மாசுப்பிரமணியம், கிரிதரன், அபெக்ஸ் கருணாநிதி, ராஜ்குமார், சுரதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

0 comments: