Tuesday, February 17, 2015

On Tuesday, February 17, 2015 by Unknown in ,    
கிரானைட் குவாரி உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன்: ரூ.2 கோடியை கோர்ட்டில் டெபாசிட் செய்ய உத்தரவு
மதுரை மாவட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்ததாக பல்வேறு கிரானைட் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதன்படி, கீழையூர், கீழவளவு, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த கிரானைட் நிறுவனங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த நிறுவனங்களில் அரசுக்கு சொந்தமான கிரானைட் கற்கள் முறைகேடாக வெட்டி எடுத்து பதுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த கிரானைட் நிறுவனங்களை சேர்ந்த நாகூர் அனீபா, பி.எல்.படிக்காசு, சோலைராஜன், மோகன், சேதுராமன் ஆகிய 5 பேரையும் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி மதுரை 1–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி கே.எச்.இளவழகன் விசாரித்து, படிக்காசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
நிபந்தனையில், பி.எல்.படிக்காசு 2 கோடி ரூபாய் ரொக்கமாக கோர்ட்டில் வைப்பீடாக வைக்க வேண்டும் என்றும், ரூ.2 கோடியே 38 லட்சத்திற்கான வங்கி உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும், அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மோகன், நாகூர் அனீபா ஆகியோரது ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார். சோலைராஜனுக்கு ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. மற்றொரு வழக்கில் ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

0 comments: