Wednesday, February 04, 2015

On Wednesday, February 04, 2015 by Unknown in ,    
மதுரையில் இன்று சாலையில் படுத்து பார்வைற்றோர் மறியல்: 30 பேர் கைது
குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டித்தர வேண்டும், வங்கிகடன் மற்றும் டெலிபோன் பூத்துடன் பெட்டிக்கடை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் இன்று, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினார்கள்.
கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலவாரிய அதிகாரி சகுந்தலா மற்றும் போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் மாற்றுத்திறனாளிகள் 30 பேர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும் என்று உறுதியாக இருந்தனர்.
தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அவர்களை போலீசார், வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: