Tuesday, February 17, 2015

On Tuesday, February 17, 2015 by farook press in ,    
உடுமலை அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 4,655 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் அழித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீதம்பட்டி பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29–ந் தேதி கேரளாவுக்கு எரிசாயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதைதொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த இளங்கோவன் (வயது 33) என்பவரது தோட்டத்தில் சோதனை செய்தபோது அங்கு சிமெண்ட் கூரை போடப்பட்ட குடோனில் 133 கேன்களில் தலா 35 லிட்டர் வீதம் 4,655 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அந்த எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 4,655 லிட்டர் எரிசாராயத்தை கலால்துறை தனிதாசில்தார் கனகராஜ், குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், வருவாய் ஆய்வாளர், கிராமநிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நேற்று குடிமங்கலம் அருகே உள்ள குமணன் குட்டையில் கொட்டி தீயிட்டு அளிக்கப்பட்டது.

0 comments: