Wednesday, February 04, 2015

On Wednesday, February 04, 2015 by Unknown in ,    
ரூ.58 கோடி கிரானைட் முறைகேடு: தி.மு.க. பிரமுகருக்கு வலைவீச்சு
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகம் இதுவரை 135 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், மதுரையில் கடந்த 2 மாதமாக முகாமிட்டு கிரானைட் முறைகேடு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்ற சகாயம், முறைகேட்டில் ஈடுபட்ட குவாரிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தார். தற்போது பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலங்களை பெற்று வருகிறார். இன்னும் ஓரிரு வாரத்தில் சகாயத்தின் விசாரணை அறிக்கை தயாராகி விடும் என்று தெரியவந்துள்ளது.
இதனிடையே மதுரை மாவட்ட நிர்வாகமும் மற்றொரு கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் கீழையூர், கீழவளவு, அய்யாப்பட்டி, உசிலம்பட்டி, மலம்பட்டி பகுதிகளில் சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகளை நடத்தி பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் கிரானைட் அதிபர்கள் படிக்காசு, சோலைராஜன், மோகன், நாகூர்அனிபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே ரூ.58 கோடி கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக தி.மு.க. பிரமுகர் இப்ராகிம்சேட் மீதும், அவரது மேலாளர் ஜெயராமன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஜெயராமன் கைது செய்யப்பட்டார். தலைமறைவான இப்ராகிம்சேட்டை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் குவாரிகளில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து தாசில்தார்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட வருவாய் துறையினர் தனியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். வீடியோ மற்றும் புகைப்படங்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. துல்லியமாக மதிப்பிடப்பட்டு வருகிறது.
அடுத்தடுத்த விசாரணைகளால் கிரானைட் அதிபர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க கிரானைட் அதிபர்கள் மற்றும் முக்கிய ஊழியர்கள் தலைமறைவாகி விட்டதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் அவர்களது இருப்பிடத்தை கண்காணிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்

0 comments: