Wednesday, February 04, 2015

On Wednesday, February 04, 2015 by Unknown in ,    

மதுரை உத்தங்குடி பஸ் நிறுத்தம் அருகே குடியரசு தினத்தையொட்டி காங்கிரஸ் சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு இருந்தது.
அதில், இந்திய வரைப்படத்துக்குள் சிங்கம் மீது பாரத மாதா கையில் தேசிய கொடியுடன் வீற்றிருக்கும் படம் இடம் பெற்றிருந்தது. நடிகை குஷ்பு பாரத மாதா தோற்றத்தில் வீற்றிருப்பது போன்று அந்த படம் இருந்தது.
ஜனவரி 26–ந்தேதி முதல் இந்த பிளக்ஸ் போர்டு, இருந்தபோதும் குஷ்பு பாரத மாதாவாக இருப்பது யாருக்கும் தெரியவில்லை.
இதுகுறித்து மதுரை மாவட்ட பா.ஜனதா கட்சியின் துணைத்தலைவர் ஹரிகரனுக்கு நேற்று தெரிய வந்தது. அவர், இந்த பிளக்ஸ் போர்டு மூலம் தேசிய சின்னம் மற்றும் தேசிய கொடியை அவமதிப்பு செய்ததற்காக காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த புகார் கொடுத்த சில மணி நேரத்தில் உத்தங்குடி பஸ் நிறுத்தம் அருகில் இருந்த சர்ச்சைக்குரிய பிளக்ஸ் போர்டை போலீசார் அகற்றினார்கள்

0 comments: