Tuesday, February 17, 2015

On Tuesday, February 17, 2015 by farook press in ,    
12வது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களில் ஐந்தாயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இந்திய கட்டுமான பொறியாளர் சங்கத்தின் திருப்பூர் மையமும், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை முன்னாள் சித்த மருத்துவர் டாக்டர் அழகேந்திரன் தலைமையிலான குழுவினரும், பின்னல் புக் டிரஸ்ட் உடன் இணைந்து நிலவேம்பு கசாயம் வழங்க ஏற்பாடு செய்தனர்.
வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை, மாலை என இருவேளை ஆறு மணி நேரம் நிலவேம்பு கசாயம் பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. திருப்பூரில் டெங்கு காய்ச்சல் தாக்குதல் இருக்கும் சூழலில் புத்தகக் கண்காட்சிக்கு வருவோருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐந்தாயிரம் பேர் பயனடைந்தனர். இந்த ஏற்பாட்டைச் செய்த சித்த மருத்துவர் டாக்டர் அழகேந்திரன் மற்றும் இந்திய கட்டுமான பொறியாளர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கும் 12வது திருப்பூர் புத்தக திருவிழா வரவேற்புக்குழுவினர் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.

0 comments: