Saturday, February 14, 2015
மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளுக்கு,
குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்கள் ரூ. 1,879
கோடியில் செயல்படுத்தப்படவுள்ளன.
மத்திய அரசின் ஜவாஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்தில், மதுரை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டம், பழைய மாநகராட்சி (72 வார்டுகள்) பகுதிகளில் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
தேசிய நகர புனரமைப்புத் திட்டம், தற்போது அடல் நகர புனரமைப்புத் திட்டம் (அடல் மிஷன் ஃபார் ரெஜூவனேஷன் அண்ட் அர்பன் டிரான்ஸ்பர்மேஷன்) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழைய மாநகராட்சியுடன் மேலும் 28 வார்டுகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 100 வார்டுகள் ஆக்கப்பட்டுள்ளன. இணைக்கப்பட்ட பகுதிகளுக்கென பாதாளாச் சாக்கடை, குடிநீர், திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களும், பழைய மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பாட்டில் உள்ள குடிநீர்த் திட்டத்தில் குழாய்களை மாற்றும் திட்டமும், மத்திய அரசின் புதிய திட்டத்தில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, மதுரை மாநகராட்சி நகரப் பொறியாளர் அ. மதுரம் கூறியது: மதுரை மாநகரப் பகுதிக்கு தற்போது தேவையான அளவு குடிநீர் இருந்தாலும், ஒரு சில இடங்களில் பற்றாக்குறை உள்ளது. மேலும், விரிவாக்கப் பகுதிகளுக்கும் சீராக
குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ரூ. 280 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், விரிவாக்கப் பகுதியின் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு ரூ. 618 கோடிக்கும், பழைய 72 வார்டுகளில் உள்ள குடிநீர் விநியோகக் குழாய்களை மாற்ற ரூ. 384 கோடிக்கும், விரிவாக்கப் பகுதிகளில் குடிநீர்க் குழாய்கள் அமைக்க ரூ. 444 கோடிக்கும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு ரூ. 153 கோடிக்கும் விரிவானத் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இத் திட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்வதற்கும், சென்னை ஐஐடி நிபுணர் குழுவுக்கு திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளோம். ஐஐடி நிபுணர் குழுவினர் திட்ட அறிக்கையை சீராய்வு செய்வர். மேலும், திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து நேரடி ஆய்வும் மேற்கொள்வர். அதனடிப்படையில், விரிவானத் திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.
இந்தத் திட்டங்களுக்கான மதிப்பீட்டில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ளவற்றில் தமிழக அரசு 30 சதவீதமும், மாநகராட்சியின் பங்களிப்பாக 20 சதவீதமும் வழங்கப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல...
-
திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த நாளை முன்னிட்டும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கருமண்டபத்தில...
-
அரசு மேல்நிலைப் பள்ளி கண்ணுடையான் பட்டியில் பயிலும் மாணவர்களுக்கு 1 லட்சம் ௹பாய மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அப்பள்ளி...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
திருப்பூர் காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியில் நிர்வாகவியல் துறை சார்பில் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சவுரி...
0 comments:
Post a Comment