Tuesday, February 17, 2015

On Tuesday, February 17, 2015 by Unknown in ,    
பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: முன்ஜாமீன் கேட்டு அட்டாக் பாண்டி மனுதாக்கல்தி.மு.க.வின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த பொட்டு சுரேஷ், கடந்த 2013–ம் ஆண்டு ஜனவரி மாதம் 31–ந் தேதி மதுரையில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக்கொலை தொடர்பாக தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் வேளாண் விற்பனைக்குழு தலைவர் அட்டாக்பாண்டியின் உறவினர் உள்பட 15 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த வழக்கில் அட்டாக் பாண்டியை போலீசார் தேடி வந்தனர். அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே அவரை, தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர்.
இந்த நிலையில் அட்டாக்பாண்டி முன்ஜாமீன் கேட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
பொட்டு சுரேஷ் கொலைக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை அந்த கொலை வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு இன்று, நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், அட்டாக்பாண்டிக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் அவர் வாதாடுகையில், அட்டாக்பாண்டி மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசியல் விரோதம் காரணமாக, பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில், அட்டாக்பாண்டி சம்மந்தப்பட்டுள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அவருக்கு, முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று கூறினார்.
அட்டாக்பாண்டி தரப்பில் ஆஜரான வக்கீல் மலையேந்திரன் கூறுகையில், இந்த வழக்கில் மூத்த வக்கீல் ஆஜராகி வாதாட இருப்பதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதைதொடர்ந்து நீதிபதி பிரகாஷ், வழக்கு விசாரணையை வருகிற 23–ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

0 comments: