Tuesday, February 17, 2015
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு நடைபெற்ற பூமி பூஜையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கலந்து கொண்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் தமிழக அரசின் ஊராக உட்கட்ட அமைப்பு திட்டத்தின்மூலம் வாலாந்தூர் சொக்கத்தேவன்பட்டி கிராமத்தில் இருந்து கல்கொண்டான்பட்டி வரை ரூ.65 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலையும், வீரபாண்டி கிராமத்தில் இருந்து விண்ணக்குடி கிராமத்திற்கு ரூ.25 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது.
விக்கிரமங்கலம் கொசவபட்டி கிராமத்தில் இருந்து வடுகப்பட்டி கிராமம் வரை தார்சாலை ரூ.43 லட்சத்து 65 ஆயிரம் 2014–2015 ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலை நடைபெறுவதற்கு பூமி பூஜை கொசவபட்டி வடுகப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தலைமை வகித்து வேலையை தொடங்கி வைத்தார். செல்லம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பவளக்கொடி ராசுக்காளை, கொடிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கருத்தம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.இ.பார்வர்ட் பிளாக் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ரவி, உசிலம்பட்டி நகர செயலாளர் பாஸ்கரபாண்டி, சவுந்திரபாண்டி மற்றும் அ.தி.மு.க. மாணவர் அணி மகேந்திரபாண்டி, சக்கரப்பநாயக்கனூர் ஜெயபாண்டி, தேவன், ஆசைமணி, முன்னாள் கவுன்சிலர்கள் ராமன், முருகன், டாஸ்மாக் வடிவேல் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகராட்சி 2–வது மண்டலத்துக்கு உட்பட்ட 16–வது வார்டு முதல் 30–வது வார்டு வரை உள்ள 15 வார்டுகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் ...
-
திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 36). இவருடைய மனைவி தமிழரசி. இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தி...
-
திருச்சி அயன் ஸ்டீல் மெர்ச்சென்ட்ஸ் அசோசியேசன் சார்பாக கடலூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள அத...
-
திருச்சி திருச்சியில் 10315,10409 நம்பர்கள் உடைய மதுபான கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கூறுகைய...
-
சேலம் அருகே ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவி சில்மிஷம் செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவி கர்நாடக மாநிலம...
-
நங்கவரம் பண்ணை சார்பாக கலவை உரக்கிடங்கிற்கு 1 ஏக்கர் நிலம் நன்கொடை ...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
0 comments:
Post a Comment