Tuesday, February 17, 2015
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாசி மகாசிவராத்திரியன்று விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபட்டால் இம்மையிலும் மறுமையிலும் முக்தி கிடைக்கும் என்பது சிவ பக்தர்களது நம்பிக்கை. அதனடிப்படையிலேயே ஆண்டுதோறும் சிவாலயங்களில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு திருவோணம் சிவராத்திரியும், புதன்கிழமை மாசி அமாவாசையும் வருகின்றன. இதையடுத்து செவ்வாய் இரவு 10 மணிக்கு அம்மன் சன்னதியில் தொடங்கும் அபிஷேகம், புதன் அதிகாலை 1.30 மணிக்கு நிறைவடைகிறது. சுவாமி சன்னதியில் செவ்வாய் இரவு 11 மணிக்குத் தொடங்கும் அபிஷேகம் புதன் அதிகாலை 2.45 மணிக்கு முடிவடைகிறது.
கட்டளை அடிப்படையில் அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதில் பால், தயிர், மோர், பன்னீர், இளநீர், பழங்கள், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவியங்கள் மூலம் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது ஓதுவார்கள் பாராயணம் பாடுவார்கள். விடிய விடிய சிவராத்திரி அபிஷேகத்தில் பங்கேற்கும் சிவாச்சாரியார்கள், பின்னர் வீடுகளுக்குச் சென்று விரதத்தை முடித்து பூஜை செய்வர்.
மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையில் நன்மை தருவார், தெற்கு மாசி வீதியில் உள்ள திருமறைநாதர், தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் மற்றும் செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை இரவு விடிய விடிய சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
சிறப்புப் பேருந்துகள்: சிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியூர்களுக்குச் செல்வர். இதையடுத்து மாட்டுத்தாவணியிலிருந்து ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருமாத்தூர் பகுதிக்கும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளுக்கும் விடிய விடிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிவராத்திரியை முன்னிட்டு எல்லீஸ்நகர், பெரியார் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து ஜான்ஸிராணி பூங்கா பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நகரில் விடிய விடிய பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகராட்சி 2–வது மண்டலத்துக்கு உட்பட்ட 16–வது வார்டு முதல் 30–வது வார்டு வரை உள்ள 15 வார்டுகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் ...
-
திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 36). இவருடைய மனைவி தமிழரசி. இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தி...
-
திருச்சி அயன் ஸ்டீல் மெர்ச்சென்ட்ஸ் அசோசியேசன் சார்பாக கடலூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள அத...
-
திருச்சி திருச்சியில் 10315,10409 நம்பர்கள் உடைய மதுபான கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கூறுகைய...
-
சேலம் அருகே ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவி சில்மிஷம் செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவி கர்நாடக மாநிலம...
-
நங்கவரம் பண்ணை சார்பாக கலவை உரக்கிடங்கிற்கு 1 ஏக்கர் நிலம் நன்கொடை ...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
0 comments:
Post a Comment