Saturday, February 28, 2015

On Saturday, February 28, 2015 by Unknown in ,    
மதுரை அருகே அ.தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொலை
மதுரை அருகே உள்ள சிலைமானை அடுத்துள்ளது கார்சேரி கிராமம். இந்த கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் கருப்பசாமி (வயது 62) அ.தி.மு.க.வை சேர்ந்த கருப்பசாமி அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு கார்சேரியில் பொது நடைபாதையில் கட்டப்பட்ட வீடு குறித்து பிரச்சினை எழுந்தது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை ஆக்கிரமிப்பு செய்வதற்கு எதிராக கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதனால் கடந்த 26–ந்தேதி கிராம அதிகாரி மற்றும் வருவாய் ஊழியர்கள் முன்னிலையில் அந்த வீடு அகற்றப்பட்டது.
வீடு அகற்றப்பட்டதற்கு பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி தான் காரணம் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் நினைத்தனர். இதனால் அவரை தீர்த்துக்கட்ட அந்த தரப்பினர் முடிவு செய்தனர். நேற்று கருப்பசாமியின் வீடு அருகே 6 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருந்து கருப்பசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கருப்பசாமியின் மகன் வீரமணியையும் அந்த கும்பல் கொல்ல முயன்றது.
பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த கருப்பசாமி மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிலைமான் போலீசார் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மதுரையில் பஞ்சாயத்து தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: