Thursday, February 05, 2015

On Thursday, February 05, 2015 by farook press in ,    
பொங்கலூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதித்த வடமலைபாளையம் ஊராட்சி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. இந்த முகாமுக்கு ஒன்றிய ஆணையாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அதிகாரி முருகேசன், ஊராட்சி தலைவர் தர்மராஜ், ஒன்றிய கவுன்சிலர் செல்வநாயகி மோகன்ராஜ், ஊராட்சி துணை தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல் டெங்கு காய்ச்சல் குறித்தும், வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கி பேசினார். தொடர்ந்து மஸ்தூர் பணியாளர்களை கொண்டு குக்கிராம பகுதிகளில் குப்பைகள், மேல்நிலைத்தொட்டிகள் மற்றும் தரை மட்ட தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டது. வீடு வீடாக டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் மாலை நேரங்களில் கொசு மருந்து அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

0 comments: