Thursday, February 05, 2015

On Thursday, February 05, 2015 by farook press in ,    
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து பல்வேறு முன்னணி நிறுவனங்களை கொண்டு வேலைவாய்ப்பு முகாமை வருகிற 7–ந் தேதி (சனிக்கிழமை) நடத்த உள்ளது. தாராபுரம்–பொள்ளாச்சி சாலையில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் இந்த முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள படித்த மற்றும் படிக்காத தொழிற்பயிற்சி பெற்ற மற்றும் பெறாத ஆண், பெண் அனைவரும் கலந்துகொண்டு பயன்அடையலாம்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் தங்களது குடும்ப அட்டையின் நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்–2 ஆகியவற்றுடன் வரவேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

0 comments: