Saturday, February 07, 2015

On Saturday, February 07, 2015 by Unknown in ,    
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு மையம் தொடக்கம்
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கு கருவிழி, கைரேகை, பதிவு, புகைப்படம் எடுப்பதற்கான நிரந்தர மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் முதல் மாவட்டத்தில் 20 மையங்கள் செயல்படுகின்றன.
இதுதவிர மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் நிரந்தர பதிவு மையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சுத்தநகல் பிரிவு அருகே உள்ள அறை (பழைய பாஸ்போர்ட்டு பிரிவு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிரந்தர தேசிய மக்கள் தொகை பதிவு மையத்துக்கு ஒருங்கிணைப்பு அலுவலராக ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் சோமசுந்தர சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிரந்தர பதிவு மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்

0 comments: