Saturday, February 07, 2015

On Saturday, February 07, 2015 by Unknown in ,    
இளைஞர்களை நல்வழிப்படுத்த திரைப்படத்தில் நடித்துள்ளேன்: சாமியார் குர்மீத்ராம் ரகீம்சிங் பேட்டி
‘தேரா சச்சா தேவா’ என்ற அமைப்பின் தலைவர் குர்மீத்ராம் ரகீம்சிங். இவர் சமூக சேவைகள் செய்து வருகிறார். இவர் நடித்துள்ள ‘தி மெசஞ்சர் ஆப் காட்’ என்ற படத்தில் சீக்கியர்களின் குருவான குருகோவிந்த் சிங் போன்று உடையணிந்து, சீக்கியர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இதனால் பஞ்சாப், அரியானாவில் சில அமைப்புகள் இப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனால் இந்த படத்துக்கு மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது. பின்னர் மேல்முறையீடு மூலம் படத்துக்கு தணிக்கை வழங்கப்பட்டது. இத்திரைப் படம் வருகிற 13–ந்தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் மதுரையில் சாமியார் குர்மீத்ராம் ரகீம்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:–
‘‘இளைஞர்கள் நிறைய பேர் சினிமா பார்ப்பதிலேயே பொழுதை போக்கி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான சினிமா படங்கள், தீய கருத்துக்களையே மக்கள் மனதில் புகுத்துகின்றன.
எனவே சினிமா மூலமாக சிறந்த கருத்துக்களை எடுத்து கூறி இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ‘தி மெசஞ்சர் ஆப் காட்’ படத்தில் நடித்துள்ளேன். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஜெர்மனி, லத்தீன் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது.
இதேபோல் பழங்குடியின மக்களை பற்றிய சினிமாவில் நடித்து வருகிறேன். அந்த திரைப்படத்துக்கான 80 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன’’ என்றார்.

0 comments: