Saturday, February 07, 2015

On Saturday, February 07, 2015 by Unknown in ,    
கிரானைட் குவாரிகளை அரசுடைமை ஆக்கக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை பொதுநலன் வழக்கு மையத் தலைவர் கே.கே. ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனு விவரம்: மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமதாரர்கள் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுப்பது கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த முறைகேடுகளுக்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
குவாரிகளுக்கு அனுமதி பெறுபவர்கள் அரசு மற்றும் தனியார் நிலத்தை ஆக்கிரமித்து கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதற்காக, பெருமளவில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிரானைட் முறைகேடுகளை தடுக்க ஏதுவாக தனியார் குவாரி உரிமங்களை ரத்து செய்து, குவாரிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்தவும், முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரி உரிமதாரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எஸ். தமிóழ்வாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தேவையில்லாமல் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

0 comments: