Thursday, February 05, 2015

On Thursday, February 05, 2015 by farook press in ,    
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நிலம் கையகப்படுத்துதல் திருத்தச்சட்டம் 2014 நகல் எரிப்பு போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. அதன்படி திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு மாநிலத்தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சின்னசாமி, மதுசூதனன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
அதைதொடர்ந்து விவசாயிகள் சட்ட நகலை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் அதை தடுத்து நிறுத்தி அவர்கள் கையில் இருந்த சட்ட நகல்களை பறித்தனர். உடனே விவசாயிகள் சட்டநகல்களை கிழித்து எறிந்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்துசென்றனர். இந்த போராட்டத்தில் 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

0 comments: