Sunday, February 08, 2015

On Sunday, February 08, 2015 by Unknown in ,    
மதுரை மாநகராட்சி அலுவலர்களை பணிசெய்ய விடாமல் தடுத்த துணை ஆட்சியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பழனிச்சாமி தலைமையில், கடந்த வெள்ளிக்கிழமை புதூர் லூர்து நகரில் அதிகாரிகள் வீடுதோறும் சென்று டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் ஆய்வு நடத்தினர். அதிகாரிகள், ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் அருள்தேவராஜ் என்பவர் வீட்டில் ஆய்வு செய்ய சென்றபோது, அவர் வீட்டுக்குள் அலுவலர்களை அனுமதிக்கவில்லையாம். இது குறித்து, உதவி ஆணையர் பழனிச்சாமி கொடுத்த புகாரின்பேரில், அரசு அலுவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக, அருள்தேவராஜ் மீது வழக்குப் பதிந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

0 comments: