Sunday, February 08, 2015

On Sunday, February 08, 2015 by Unknown in ,    

தமிழகத்தில் 38 ஆயிரத்து 500 கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் கோயில் உண்டியல் கொள்ளை மட்டுமின்றி, அம்மன் சிலைகளில் தாலி மற்றும் நகை திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது.

இது போன்ற கொள்ளையை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கோயில்களில் சிசிடிவி கேமரா மற்றும் அலாரம் பொருத்த அறநிலையத்துறை அதிகாரிகள் அந்தந்த கோயில் அதிகாரிகளுக்கு உத்தரவிட் டுள்ளனர். கோயில் செலவில் இப்பணிகள் மேற்கொள்ளப்ப டும். தமிழகத்தில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் இப்பணி நடந்து வருகிறது. மேலும் ஏற்கனவே பழுதாகி இருக்கும் கேமராக்களையும் பழுதுபார்க்கும்படி அந்தந்த கோயில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கேமராக்களின் கண்ட்ரோல் அனைத்தும் உதவி ஆணையர், செயல் அலுவலர் அறையில் இருக்கும். அவர்கள் பணி செய்து கொண்டே கோயிலுக்கு வரும் நபர்களை கண்காணிக்க முடியும். கோயில்களில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், இந்த கேமராக்கள் மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். மேலும் இரவு காவலர் இல்லாத கோயில்களில் முன்னாள் படைவீரர்கள் காவலர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

0 comments: