Saturday, March 14, 2015

On Saturday, March 14, 2015 by Tamilnewstv in    


        திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு திட்டத்தின்கீழ் விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 நபர்களுக்கு தலா ரூ. 1 இலட்சம் விபத்து நிவாரண உதவித்தொகை வழங்கும் விழா  மாவட்ட ஆட்சித்தலைவர்                         பழனிசாமிääஅவர்கள் தலைமையில்ää அரசு தலைமைக் கொறடா மனோகரன்ää நாடாளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் முன்னிலையில்  இன்று (14.03.2015) நடைபெற்றது.
        இவ்விழாவில் 267 பெண்களுக்கு ரூ. 11 இலட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் நிவாரண உதவித்தொகை 2 நபர்களுக்கு வழங்கி கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் பூனாட்சி அவர்கள் பேசியது :
       மக்களின் முதல்வர் தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளது. குறிப்பாகää பெண்கள் வாழ்;வில் உயரவும்ää கீழ்மட்ட நிலையில் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் ஏற்றமடையவும் பல எண்ணற்ற திட்டங்களை தீட்டி தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில்ää விலையில்லா கறவை மாடுகள்ää வெள்ளாடுகள் வழங்கியும்ää பெண்களுக்கு இல்லற சுமையை குறைக்கும் வகையில் விலையில்லா மிக்ஸிää கிரைண்டர்ää மின்விசிறிää படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் ரூ.50ää000ம் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறதுபெண்களின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ள தமிழக அரசுக்கு மக்கள் என்றென்றும் உறுதுணையாக இருந்திட வேண்டும் எனத் தெரிவித்தார்.
      மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது தலைமையுரையில் தெரிவித்தது
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு  தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில்ää தையல் தொழில் பயின்று 20 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட ஏழை எளிய விதவைகள்ää கணவனால்  கைவிடப்பட்ட பெண்கள்ää உடல் ஊனமுற்ற பெண்ää சுயவேலை வாய்ப்பு பெறுவோர் உள்ளிட்டவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.24ää000க்குள் மிகாமல் இருந்தால் தேர்வுக் குழுவினரால் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.             

                                                 திருச்சிராப்பள்ளி  மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் கடந்த ஏப்ரல்-2011 முதல் பிப்ரவரி-2014 வரை ரூ. 27ää89ää156 மதிப்பில் வழங்கப்பட்ட 741 தையல் இயந்திரங்களில் 121 தையல் இயந்திரங்கள் கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் உள்ள பயனாளிகளுக்கும்ää  620 தையல் இயந்திரங்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியான 353 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம்  ரூ. 11ää14ää485 மதிப்பில் மீதமுள்ள 267 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
                                                 இவ்விழாவில் மாண்புமிகு மாநகராட்சி மேயர் ஜெயாää சட்டமன்ற உறுப்பினர்கள் .சிவபதிää பரஞ்ஜோதிää இந்திராகாந்திää வளர்மதிää துணை மேயர் சீனிவாசன்ää மாவட்ட ஊராட்சித்தலைவர் ராஜாத்திää மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராமுää மாமன்ற உறுப்பினர் ராஜா  உட்பட பலர் கலந்து கொண்டனர்.


     முன்னதாகää மாவட்ட சமூக நல அலுவலர் உஷா வரவேற்புரையாற்றினார்முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக உதவி இயக்குநர் முத்துசாமி நன்றி கூறினார்.

0 comments: