Monday, March 09, 2015

On Monday, March 09, 2015 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆலோசனையின் பேரில் மாவட்ட மாணவரணி சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.அன்பகம் திருப்பதி ஏற்பாட்டின் பேரில் மக்களின் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி விவேகானந்தா சிவாலயத்தில் உள்ள குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா  நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட மாணவர் அணி  செயலாளரும், மாநகராட்சி நகரமைப்பு குழுத்தலைவருமான ஆர்.அன்பகம் திருப்பதி தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பரமசிவம், மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர். கேக் வெட்டி,சிவாலயத்திற்கு தொலைக்காட்சிப்பெட்டி,120 தலையணை, 120 பெட்சீட்டுகள், நோட்டுப்புத்தகங்கள், எழுது பொருட்கள் மற்றும் மதிய உணவு ஆகியவற்றை குழந்தைகளுக்கு வழங்கினர்.
இந்த  நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், துணைத்தலைவர் ஆனந்தகுமார், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான். வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், 4வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், சார்பு அணி நிர்வாகிகள் கண்னப்பன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் நா.சக்திவல், ஸ்டீபன்ராஜ், வளர்மதி கருணாகரன், சாகுல்ஹமீது, தாமோதரன், பூண்டி நகர செயலாளர் விஸ்வநாதன், பூண்டி பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி, முன்னால் தலைவர் லதாசேகர், பழனிசாமி, கவுன்சிலர் பாலசுப்பிரமணி, மணவரணி நிர்வாகிகள் மாரிமுத்து, சபாபதி ஆகியோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக  ஒன்றிய மாணவரணி செயலாளர்ஏ.ஆர்.கார்த்திகேயன் வரவேற்றார் முடிவில் ஸ்ரீ விவேகானந்தாசிவாலய நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.


0 comments: