Monday, March 09, 2015

On Monday, March 09, 2015 by farook press in ,    
வெள்ளகோவில், மார்ச் 9–
இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஊழியர் சங்கத்தின் சார்பில் வருகிற 11–ந்தேதி புதிய பாலிசிகள் விற்பனை இயக்கம் நடத்த உள்ளனர்.
இதுகுறித்து ஊழியர் சங்கத்தின் நிர்வாகி கூறியதாவது:–
நடப்பு நீதி ஆண்டில் கடைசி மாதத்தில் உள்ளது. இன்சூரன்ஸ் துறையில் எல்.ஐ.சி. நிறுவனம் சிறப்பான வணிகத்தினை நிறைவு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டு உயர்வு பாலிசிகள் மீதான சேவைவரி, பாலிசி உரிமத்தொகைக்கு வருமானவரி என மத்திய அரசும் பாலிசிகளின் மீது ஐ.ஆர்.டி.ஏ.வின் கட்டுப்பாடுகள் என தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கைகளும் தீவிரப் படுத்தப்படுகின்றன.
எனவே இதற்கு முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரும் போராட்டங்கள் நடத்தி உள்ளனர்.
தற்போது மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப புதிய திட்டங்கள் எல்.ஐ.சி. அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு அடிப்டையாக புது வணிகத்தினை உயர்த்திடும் பணிகளில் நாம் முன்னிற்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு ஊழியர் குடும்பத்தில் பாலிசி எடுப்பது, தெரிந்தவர்களிடம் பாலிசி பெற்றுத்தருவது, வணிகத்திற்காக முகவர்கள் வளர்ச்சி அதிகாரி களுக்கு உதவுவது என சங்கத்தின் சார்பில் முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.
இதற்காக காங்கயம் சங்கத்தலைவர் அற்புத ராஜ், செயலாளர் அங்கப்பன், பொருளாளர் ராஜன் தலைமையில் ஊழியர்கள் ஒவ்வொரு முகவரிடம் புதிய பாலிசி விற்பனைக்கு ஆதரவு கோரி வருகின்றனர்.

0 comments: