Monday, March 09, 2015
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சியில் ரூ. 59.30 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஊத்துக்குளி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 2 குப்பை அள்ளும் வாகனங்கள், குப்பைகளை தரம் பிரிக்க பயன்படுத்தப்படும் கூடைகள், ரூ.5 லட்சம் மதிப்பில் வாங் கப்பட்டுள்ள கருவிகள், ரூ. 25.60 லட்சம் மதிப்பில் உலர் கலத்துடன் கட்டப்படும் கட்டிடப் பணிகளையும் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
குப்பையள்ளும் வாகனங்கள் சிறந்த வசதியுடன் வாங்கப்பட்டுள்ளது என பாராட்டினார். கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.
தொடர்ந்து ஊத்துக்குளி பேரூராட்சியில் ரூ.6.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பய ணிகள் நிழற்குடை ஆகிய வைகளையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
ஆய்வின்போது உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கலைவாணன், பேரூராட்சிகள் துறை உதவி செயற்பொறியாளர் மனோகரன், ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலர் ராமபிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் பொது இ–சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இம்மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றுகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இம்மையத்தினை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். ஆய்வின்போது பொதுமக்களின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். மேலும் உள்கட்டமைப்பு வசதிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் தேசிய நில அளவை ஆவணங்கள் வைப்பு அறையையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்கள் பெயர் திருத்தம், சேர்த்தல் முகவரி மாற்றம் குறித்து பதிவுகள் மேற்கொள்ளும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவினையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
ஆய்வின்போது பல்லடம் வட்டாட்சியர் அம்சவேணி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை அருகே உள்ளது ஒண்டிப்புதூர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் பஸ்சுக்காக காத்து நின்றனர். பஸ் நிறுத்தம் அருகே ஒரு வேன் மற்றும் 2 சக்...
-
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
நேற்றைய நீயா-நானா நிகழ்வில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. தோழர்.கி.வே.பொன்னைய்யனின் வாதங்கள் ஏனோ பதியப்படாமல் போனது வருத...
-
திருச்சி கழக அமைப்புச் செயலாளரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளருமான சாருபாலா தொண்டைமான் தொகுதிக்குட்பட்ட, சோமரசம்பேட்டை முஹம்மத...
-
உடுமலை அருகில் அமராவதி பிரதான கால்வாயில் குளித்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் திங்கள்கிழமை உயிரிழந்தார். உடுமலை, காந்தி சவுக் பகுதியைச்...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
0 comments:
Post a Comment