Monday, March 02, 2015

On Monday, March 02, 2015 by Unknown in ,    
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பால், ரொட்டி போன்ற உணவுப் பொருள்கள் இலவசமாக அளிக்கப்பட்டன.
மு.க. ஸ்டாலினின் 63-ஆவது பிறந்தநாள் விழா திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன்படி, திருப்பூர் மாநகர திமுக இளைஞரணி சார்பில் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் காலை 9 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகள் என 630 பேருக்கு ரொட்டி, பால், பிஸ்கட் மற்றும் பழங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
முன்னாள் மாவட்ட பொருளாளர் மேங்கோ பழனிசாமி, மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வழக்குரைஞர் விவேகானந்தன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சிராஜ்தீன், பகுதிக் கழக நிர்வாகிகள் கணேஷ், அர்ஜுன், மாவட்ட துணைச் செயலர் சேகர், மாவட்டச் செயலர்கள் மசூது, ஜியாவுல்ஹக், நந்தகோபால் இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments: