Tuesday, March 24, 2015

On Tuesday, March 24, 2015 by Unknown in ,    

மதுரை மாநகராட்சி 2015-16 ம் நிதி ஆண்டிற்கு 6.24 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்
மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் 2015-16 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தினை மேயர் ராஜன் செல்லப்பா தாக்கல் செய்தார் .அதில் 2015-16 ம் நிதி ஆண்டின் மொத்த வரவினம் 601.99 கோடியாகவும் மொத்த செலவினம் 608.23 கோடியாகவும் நிகர பற்றாக்குறை 6.24 கோடி என திட்டமிடப் பட்டுள்ளது .மூல தன வேலைக்காக 50.68 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அரசு மான்யம் மூலம் 91.15 கோடியும்,கடன்கள் மூலம் 47.74 கோடி மூலதன வேலைகள் செய்திட நிதி மதிப்பீடு வழிவகை செய்யப்பட்டுள்ளது .மூன்றாவது வைகை குடிநீர் திட்டத்திற்கு முதல் கட்டமாக 100 கோடி செலவிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அருள்தாஸ் புரம் திருமலைராயர் படித்துறை ஆகிய தரை மட்ட பாலங்களை உயர் மட்ட பாலங்களாக உயர்த்திட 30.40 கோடி வகை செய்யப்பட்டுள்ளது .காவிரி கூடு குடி நீர் திட்டம் மூலம் சோதனை ஓட்ட முறையில் 3.25 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் திட்டம் மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் உட்கட்டமைப்பு வசதிக்காக 15.78 கோடி ,மாட்டு தாவணி கோச்சடை பகுதிகளில் லாரிகள் நிறுத்து மிடதிற்காக 11.02 கோடி ,விராட்டிபத்து அருகில் மீன் வளாகம் அமைத்திட 5.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது செல்லூரில் நவீன பல்நோக்கு மருத்துவமனை தொடங்கிடும் நிலையில் உள்ளது அனைத்து மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் சிஸ்டம் நடப்பு நிதி ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ளது .
முதல்வர் படம் இல்லாத பட்ஜெட் புத்தகம்
மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தில் தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வம் படம் இடம் பெறவில்லை .மாறாக அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்று இருந்தது .துணை மேயர் திரவியம் படமும் இடம்பெறவில்லை

0 comments: