Tuesday, March 24, 2015

On Tuesday, March 24, 2015 by Unknown in ,    

போக்குவரத்து நெரிசலை மட்டும் காரணம் காட்டி மதுரை மாநகராட்சி பகுதிகளுக்குள் செய்து வரும் மாற்றங்கள் 25 நூற்றாண்டு கால வரலாற்றை உள்ளடக்கிய மதுரை மாநகரத்தை தனது அடையாளத்தை இழக்க செய்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
உலகின் பழமையான நகரங்கள் திட்டமிட்டு அமைக்கப்பட்டது போல மதுரையும் திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஒரு நகரம் ஆகும்
வாழைக்காய் பேட்டை ,நெல் பேட்டை ,தவிட்டு சந்தை ,வெற்றிலை பேட்டை என வணிகப் பெருமை கட்டும் இடங்களை கொண்ட மதுரை மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகையால் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கிறோம் என்ற பெயரில் செய்யக்கூடிய மாற்றங்கள் மதுரையின் அடிப்படை கட்டமைப்பை மாற்றி விடக் கூடாது
எப்பொழுதும் பரபரப்பாக தூங்கா நகராக இயங்கி கொண்டிருந்த மதுரை மாநகரம் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மையப்பகுதியில் இயங்கி வந்த சென்ட்ரல் மார்க்கெட் மாட்டுத்தாவணி அருகே மாற்றப்பட்டது
மாற்றப்பட்ட இடத்தில் மிகப் பெரிய பார்க்கிங் வசதி செய்யப்படும் என்று கூறி இதுவரை அத்திட்டமும் நிறைவேற்றப் படவில்லை போக்குவரத்து நெரிசலும் குறைந்த பாடில்லை
ஒருங்கிணைந்த நெல் வணிக வளாகம் பூ மார்க்கெட் என நகரின் அடையாளங்களாக இருந்த அனைத்தும் இடம் மாற்றப்பட்டு பொலிவிழந்து நிற்கின்றன
இந்த மாற்றங்களால் போக்குவரத்து நெரிசலா வது குறைந்ததா என்றால் அதுவும் இல்லை என்பதே வியப்புக்குரிய விடையாக இருக்கிறது .இந்நிலையில் மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள மொத்த வியாபார பழக்கடைகளை மாட்டுத்தாவணி க்கு மாற்றுவது தொடர்பாக சிம்மக்கல் ,யானைக்கல்,வக்கீல் புது தெரு கீழ மாரட் வீதி ஆகிய பகுதிகளை சார்ந்த பழ வியாபாரிகள் சங்கத்தினரிடம் மேயர் ராஜன் செல்லப்பா ஆலோசனை நடத்தி உள்ளார் ,இதற்கு அவர்களும் ஒப்புதல் அளித்து விட்டதாகவே தெரிகிறது
மதுரையில் மாற்றங்கள் என்ற பெயரால் செய்யப்படுகிற வேலைகள் அடிப்படை கட்டமைப்பை மாற்றி விடுமோ என்ற அச்சம் சமூக ஆர்வலர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது .போக்குவரத்து நெரிசலை மட்டும் காரணம் காட்டி பரிபாடல் பாடிய மாமதுரையை மாற்றிக் கொண்டே இருக்கலாமா

0 comments: