Tuesday, March 24, 2015

On Tuesday, March 24, 2015 by Unknown in ,    

மதுரை மாநகராட்சி 2015-16 ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டம் வழக்கம் போல அம்மா கோஷத்துடன் தொடங்கியது .கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர் .மண்டலம் 1 ன் தலைவர் ராஜபாண்டி கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தார் .கூட்டம் தொடங்கியவுடன் தவறான எண்ணத்தோடு கருப்பு சட்டை அணிந்து வந்து இருக்கும் திமுக கவுன்சிலர்கள் அவையை விட்டு வெளியேற வேண்டும் என மேயர் கூறினர்ர் .உடனே திமுக கவுன்சிலர்கள் மண்டலம் 1 ன் தலைவர் ராஜபாண்டி கருப்பு சட்டை அணிந்து வந்ததை சுட்டி காட்டினர் .அதற்கு பதில் அளித்த மேயர் அவர் அய்யப்பனுக்கு கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளார் நீங்கள் அது போல வந்துள்ளீர் களா என கேள்வி எழுப்பிட இடையில் குறுக்கிட்ட மண்டலம் 1 ன் தலைவர் ராஜபாண்டி முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முக அழகிரி குறித்து அவதூறாக பேச திமுக கவுன்சிலர்கள் அவையை விட்டு வெளியேற முற்பட்டனர் .அப்போது அதிமுக கவுன்சிலர்கள் எஸ் டி ஜெயபால் ,விஜயராகவன் ஆகியோர் திமுக கவுன்சிலர்களை நோக்கி தண்ணீர் பாட்டில்களை வீசினர் இதில் அதிமுக கவுன்சிலர் ஜெயலெட்சுமி காயமடைந்தார் .அவைக் காவலர் மீனாட்சி சுந்தரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது .எதிர்கட்சியினரை வெளியேற்றிட வேண்டும் என்பதற்காக அதிமுக குழு தலைவரும் ,மாமன்ற உறுப்பினரும் தண்ணீர் பாட்டில்களை வீசிய சம்பவம் அவை மரபையும் ஜனநாயகத்தையும் கேள்விக் குறி ஆக்கி உள்ளது
எம் எல் ஏ மயக்கம்
இதற்கிடையே அவைக்கு வந்திருந்த மத்திய தொகுதி எம் எல் ஏ சுந்தராஜன் திடீர் மயக்க மடைந்தார் .பின்னர் அவைக் காவலர்கள் அவரை அழைத்து சென்றனர்

0 comments: