Saturday, March 07, 2015

On Saturday, March 07, 2015 by farook press in ,    
திருப்பூர் முருகம்பாளையம் அண்ணாமலைநகர் பகுதியை சேர்ந்தவர் முத்துபெருமாள். இவரது மனைவி சந்தனமாரி (எ) குட்டி (வயது 20). இவர்களுக்கு 35 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதே பகுதியில் முத்துபெருமாள் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இதில் அவருடைய அண்ணன், அவருடைய மனைவி மற்றும் சந்தனமாரி வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. மேலும் குடும்பத்தகராறில் சந்தனமாரி மனஉளைச்சலுடன் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தனமாலிரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சந்தனமாரியின் அக்கா பவித்ரா கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட சந்தனமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமான 35 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்றது

0 comments: