Friday, April 17, 2015

On Friday, April 17, 2015 by Unknown in ,    
தாராபுரத்தில் கடன் தவணையை முறையாகச் செலுத்தாதவரின் காரை பறிமுதல் செய்த நிதி நிறுவன அதிபர் உள்ளிட்ட 2 பேர் மீது காவல் துறையினர் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தாராபுரம், புதுமஜீத் தெருவைச் சேர்ந்தவர் ஹைதர் அலி (46). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், தனக்குச் சொந்தமான காரின் பேரில், தனது நண்பர் ராஜா என்பவர் உதவியுடன், பொள்ளாச்சி சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சதாசிவத்திடம் ரூ. 1 லட்சம் கடனாக பெற்றிருந்தார்.
கடந்த சில மாதங்களாக கடன் தொகைக்கான மாதத் தவணையை ஹைதர் அலி முறையாகச் செலுத்தவில்லை. ஹைதர் அலி தனது காரை கருணாகரன் என்பருக்குச் சொந்தமான பழுது நீக்கும் பணிமனையில் நிறுத்தி இருந்தார்.
ஹைதர் அலி புதன்கிழமை பணிமனைக்குச் சென்று பார்த்தபோது அவரது காரை காணவில்லை. அதுகுறித்து கருணாகரனிடம் கேட்டபோது, ராஜாவின் உதவியுடன் நிதி நிறுவன அதிபர் சதாசிவம் காரை எடுத்துச் சென்றுவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, தாராபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் ராமஜெயத்திடம் ஹைதர் அலி புகார் மனு அளித்தார். நீதித் துறை நடுவர் உத்தரவின் பேரில், தாராபுரம் காவல் துறையினர் நிதி நிறுவன அதிபர் சதாசிவம், ராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: