Friday, April 17, 2015

On Friday, April 17, 2015 by Unknown in ,    




கோடை மழை தீவிரம் அடைந்ததையடுத்து அமராவதி அணை நீர்மட்டம் கடந்த சில நாள்களாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய  மாவட்டங்களில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தொடர்ந்து பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது.
இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாக பிப்ரவரி இரண்டாவது வாரத்திலேயே கோடை வெயில் தொடங்கிய நிலையில் அணையின் நீர் மட்டம் சரிந்தது. அணையில் 10 அடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது. இதனால் கோடை காலக் குடிநீர்ப் பிரச்னையைச் சமாளிக்க முடியுமா என அமராவதி ஆற்றின் கரையோர கிராம மக்கள் கவலை அடைந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழை காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் குடிநீர்த் தேவையை ஓரளவு சமாளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கரையோர கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணை நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணையில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 33 அடி நீர் மட்டம் இருந்தது.
 அணைக்கு 264 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் 491 மில்லியன் கன அடி நீர் இருப்பில் இருந்தது. அணையில் இருந்து 8 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணைப் பகுதியில் மழை அளவு 2 மி.மீ. பதிவாகியிருந்தது.

0 comments: