Friday, April 17, 2015

On Friday, April 17, 2015 by Unknown in ,    
திருப்பூர், குமரன் காலனி நியாயவிலைக் கடையை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி, 22-ஆவது வார்டுக்கு உள்பட்ட ரங்கநாதபுரம், குமரன் காலனி, புது ராமகிருஷ்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கான் நியாய விலைக் கடை குமரன் காலனி பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வருகிறது.
இந்தக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் அளவு குறைவாக வழங்குவதாகக் கூறி அப்பகுதி மக்கள் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியது: குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 5 கிலோ கோதுமை வழங்க வேண்டும். ஆனால்
4 கிலோ தான் வழங்கி வந்தனர். இந்நிலையில், தற்போது 2 கிலோ தான் வழங்கப்படும் என நியாய விலைக் கடை ஊழியர் தெரிவித்தார். அறிவித்த அளவு கோதுமை உள்ளிட்ட பொருள்களை வழங்கவேண்டும் என்றனர்.
இதையடுத்து, மாவட்ட வட்ட வழங்கல் துறை அலுவலர் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 கிலோ கோதுமை வழங்குவதாக உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து  சென்றனர்.

0 comments: