Wednesday, April 22, 2015

On Wednesday, April 22, 2015 by Unknown in ,    
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் பகுதியில் எள் அறுவடை துவங்கியுள்ளது.
முக்கிய எண்ணெய் வித்துப் பயிரான எள், குறைந்த நீரில் விளைந்து, நல்ல மகசூல் தரக் கூடியது. பி.ஏ.பி. மூன்றாம் மண்டல பாசனத்தில் மாதம் ஒருமுறை தண்ணீர் விடப்பட்டதால், மானாவாரி நிலங்களை வைத்துள்ள விவசாயிகள் எள் சாகுபடி செய்தனர்.
கடந்த தை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட எள், தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. விதைப்பு சமயத்தில் ஒரு கிலோ ரூ. 130 விற்கப்பட்டது. தற்போது அறுவடை சீசன் துவங்கி உள்ளதால், விலை சரிந்து கிலோ ரூ.90க்கு விற்கப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் எள்ளில் பெரும்பகுதி காங்கயம், ஈரோடு பகுதிகளில் உள்ள எண்ணெய் ஆலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
குறைந்த அளவிலான எள் மட்டுமே இனிப்பு மிட்டாய் மற்றும் பிற தயாரிப்பு பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறது. எள் சாகுபடிக்கு பூச்சி மருந்து, உரம் போன்றவை தேவைப்படாது என்பதால், விவசாயிகளுக்கு அதிக செலவு ஏற்படாது. இந்தாண்டு வெங்காயம் பயிரிட்டு பலர் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், எள் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

0 comments: