Tuesday, April 21, 2015

On Tuesday, April 21, 2015 by Unknown in ,    
திருப்பூரில் போலீஸாக நடித்து, நகையை வழிப்பறி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூர், குமாரானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவன் (33). இவர், பி.என்.சாலையில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடிந்து, அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், தன்னை போலீஸ் எனக் கூறி, இப்பகுதியில் திருடர்கள் நடமாட்டம் இருப்பதாக சிவனிடம் கூறியுள்ளார்.
அந்த நபர், சிவன் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கலி, அரைப் பவுன் மோதிரம் ஆகியவற்றை வாங்கி, ஒரு பிளாஸ்டிக் பையில் மடித்து, அதை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுமாறு கூறி, சிவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அங்கிருந்து வீடு திரும்பிய சிவன், பிளாஸ்டிக் பையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் நகைகள் இல்லை எனத் தெரியவந்தது. 
போலீஸாக நடித்து தன்னிடம் நகைகள் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சிவன், திருப்பூர் வடக்கு போலீஸில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீஸார்  வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

0 comments: