Wednesday, April 01, 2015

On Wednesday, April 01, 2015 by Unknown in ,    
உடுமலையை அடுத்துள்ள தளி கிராமத்தில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை இடம் மாற்ற வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தளி பேருராட்சித் தலைவர் தெய்வநாயகியிடம், பொதுமக்கள் சார்பில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்:
கடந்த 1964-ஆம் ஆண்டு தளி பேரூராட்சியில் பகுதி நேர கிளை நூலகம் தொடங்கப்பட்டது. தற்போது முழு நேரமாக செயல்பட்டு வரும் இந்த நூலகத்தில் 1,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
தற்போது உள்ள நூலகக் கட்டடம், பெண்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் வந்து செல்ல முடியாத இடத்திலும், போதிய வெளிச்சம் இன்றியும் அமைந்துள்ளது.
மேலும், நூலகர் அடிக்கடி விடுப்பு எடுப்பதால் பெரும்பாலான நாள்களில் நூலகம் முடியே கிடக்கிறது. நூலகக் கட்டடம் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருப்பதால் தவறான நடவடிக்கைகளுக்கும் பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில், தளி பிரதான சாலையில் இருந்த காவல் நிலைய கட்டடம் இடிக்கப்பட்டு அந்த இடம் பேரூராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்த இடத்தில் நூலகத்திற்கென புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: