Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
philipines girl
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அப்பு லூனா (வயது 28) இவர் பக்ரைனில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்து உள்ளார். இவர் தன்னை தனது முதலாளி மகன் கற்பழித்து விட்டதாகவும். தினமும் அடித்து உதைப்பதாகவும் சமூக வலைதளமான பேஸ் புக்கில் ஒரு வீடியோ மூலம் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோவை 19 ஆயிரம் பேர் லைக் செய்து இருந்தனர். 78 ஆயிரம் ஷேர் செய்யபட்டு இருந்தது. இதை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அரசு அவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பில்லைன்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது இதை தொடர்ந்து  தூதரக அதிகாரிகளால் அவர் மீட்கபட்டார். 
 
3 நிமிடம் ஓடக்கூடிய இந்தவீடியோவில் லூனா கூறி இருப்பதாவது:-
 
தனது முதலாளியின் போதைக்கு அடிமையான மகன் தன்னை கற்பழித்து விட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும் நான் வெளிவர உதவி செய்யுங்கள், இப்போது வரை, நான் மிகவும் பயந்து போய் உள்ளேன். என் பிறப்புறுப்பு காயமடைந்து உள்ளது. நான் தடுத்ததற்காக எனது காலில் அடித்து உள்ளார். அதனால் காலில் காயமாக உள்ளது. எனது முதலாளி மகன் என்னை திட்டினார். இதை யாரிடமாவது கூறினால் என்னை கொன்று புதைத்து விடுவதாக மிரட்டினார் என கூறி உள்ளார்.
 
அவரது முதலாளி அவரது மகன் கற்பழித்ததையும் அடித்து உதைப்பதையும் நம்ப வில்லை. ஓப்பந்தம் மீதம் முள்ள 2 மாதங்களையும் முடித்து விட்டு நீ உன் வீட்டுக்கு போ என கூறியதாக கூறியுள்ளார். நீ கர்ப்பமாக இருந்தால் கருகலைப்பு செய்து விடு என முதலாளி கூறியதாக கூறி உள்ளார். 
 
லூனா இது குறித்து எழுத்துபூர்வமாகவும் பிலிப்பைன்ஸ் தூதரகத்துக்கு ஒரு புகார் அளித்து உள்ளார்.
 
மீட்கபட்ட பிறகு அப்பு லூனா வெளியிட்டு இருந்த வீடியோவில் தான் தூதரக பாதுகாப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பில்ப்பைன்ஸ் தூதரக அதிகாரி கூறும் போது லூனாவை வேலைவாய்ப்பு நிறுவன ஊழியர்கள் அவர் வேலை செய்யும் வீட்டில் இருந்து அழைத்து வந்ததாக கூறினார். இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் கூறி உள்ளார்.
 
லூனா தாக்கபட்ட குற்றச்சாட்டை காவல்துறையினர் மறுத்து உள்ளதாக பிலிப்பைன்ஸ் தூதர துணை அதிகாரி ரிக்கி ஆரகன் தெரிவித்து உள்ளார்.
 
பிலிப்பைன்ஸ் நாட்டில் வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக அந்நாட்டை சேர்ந்த 1 கோடி பேர் உலகம் முழுவதும் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இது நாட்டின் 10 கோடி பேரில் 10 சதவீதமாகும். அவர்கள் அங்கு கேவலாமான மற்றும் ஆபத்தான தொழில்களில் ஈடுபட்டு உள்ளனர்

0 comments: