Friday, April 17, 2015

On Friday, April 17, 2015 by Unknown in ,    
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை காப்பாற்றி மதுரை வடமலையான் மருத்துவமனை டாக்டர்கள் சாதனைமதுரையை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் கோவர்த்தனன். இவரது மனைவி ஜோதி. இவர் செயற்கை முறை மருத்துவத்தில் கர்ப்பம் அடைந்தார். 6½ மாத கர்ப்பமாக இருந்தபோது டிசம்பர் மாதம் மதுரை வடமலையான் மருத்துவமனையில் ஜோதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மிக மிக குறைந்த எடையில் 3 குழந்தைகள் பிறந்தன.
இதுகுறித்து வடமலையான் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் புகழகிரி, பச்சிளம் குழந்தைகள் நல டாக்டர்கள் ஜலஜா அசோக், வினோத் ஆகியோர் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:–
இந்தியாவிலேயே மிக மிக எடை குறைவாக 3 குழந்தைகள் மதுரை வடமலையான் மருத்துவமனையில் கோவர்த்தனன்–ஜோதி தம்பதியருக்கு பிறந்தது. குழந்தைகளின் தாய் ஜோதி 6½ மாதம் கர்ப்பமாக இருந்தபோது எங்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். சேர்ந்த 7 நாட்களில் அவருக்கு சிசேரியன் மூலம் 2 பெண் மற்றும் ஒரு ஆண் என 3 குழந்தைகள் பிறந்தன.
பொதுவாக ஒரு குழந்தை பிறப்பதற்கு 10 மாதங்கள் ஆகும். ஆனால் இங்கு 12 வாரங்களுக்கு முன்னதாகவே குழந்தைகள் பிறந்தன. இயல்பாக பிறந்த குழந்தையின் எடை ஏறத்தாழ 3 கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஆனால் ஜோதிக்கு பிறந்த 3 குழந்தைகளும் 1.5 கிலோ, 500 கிராம், 540 கிராம் எடையுடன் இருந்தது.
ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த 3 குழந்தைகளும் மிக மிக எடை குறைந்ததாக இருந்ததால் மதுரை வடமலையான் மருத்துவமனையின் அதிநவீன சிசு தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டன. இந்த சாதனை இந்தியாவில் வேறு எங்கும் நிகழ்ந்தது கிடையாது.
இதற்கு முன்பு 2004–ம் ஆண்டில் உலகிலேயே மிக குறைவாக 240 கிராமில் பிறந்த குழந்தை சிகாகோவில் காப்பாற்றப்பட்டது. அதன் பிறகு 2012–ம் ஆண்டில் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் 450 கிராம் எடை கொண்ட குழந்தை காப்பாற்றப்பட்டது. தற்போது வடமலையான் மருத்துவமனையில் குறைந்த எடை கொண்ட 3 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளது.
தற்போது இந்த குழந்தைகள் 3.168 கிலோ 1.320 கிலோ, 1.476 கிலோ எடையுடன் நலமாக உள்ளனர். இந்த குழந்தைகள் பிறக்கும் போது ஒரு கையளவு மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குழந்தைகள் பிறப்பதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் மதுரை வடமலையான் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களின் தீவிர அர்ப்பணிப்பு சேவை முக்கியமானது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து வடமலையான் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் புகழகிரி கூறுகையில், வடமலையான் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் சிறப்பு பிரிவு சார்பில் ‘‘டாரிகா குழந்தைகள் நலத் திட்டம்’’ செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 3 மாதம் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெறலாம். இந்த திட்டத்தில் மருத்துவ ஆலோசனை பெற ரூ.250 மட்டுமே பெறப்படுகிறது. தற்போது மதுரை வடமலையான் மருத்துவமனையில் பிறந்த எடை குறைந்த 3 குழந்தைகளுக்கும் டாரிகா திட்டத்தில் ஒரு வருட காலம் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது என்றார்.

0 comments: